தோனி ஆதங்கத்தின் எதிரொலி: சுழலில் சுருண்டது பெங்களூரு

தோனி ஆதங்கத்தின் எதிரொலி: சுழலில் சுருண்டது பெங்களூரு
தோனி ஆதங்கத்தின் எதிரொலி: சுழலில் சுருண்டது பெங்களூரு

சென்னைக்கு எதிரான இன்றைய போட்டியில் 127 ரன்களுக்கு பெங்களூரு அணி சுருண்டது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுக்கு மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணியில் தொடக்க வீரரான பர்திவ் படேல் 53 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அனைத்து வீரர்களுமே, சென்னை வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவுட் ஆகினர். இறுதிவரை டிம் சவுதி மட்டும் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். 

சென்னை அணியின் சார்பில் ஜடேஜா 4 ஓவர்களுக்கு 18 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தமிழ்க் கவிஞர் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை பேட்டிங் செய்து வருகிறது. கடந்த போட்டியில் சென்னை தோல்வியடைந்த போது, பந்து வீச்சாளர்கள் ஏமாற்றி விட்டதாக தோனி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com