தோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி!

தோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி!

தோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி!
Published on

தோனிக்காக, இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சொன்னார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடக்கிறது. இதில் முதல் தகுதிச் சுற்றில் சிஎஸ்கே அணியிடம் தோற்ற ஐதராபாத் அணியும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணியும் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெற்றுவிட்ட சிஎஸ்கே அணியுடன் மோதும். 

ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறும்போது, ‘அணி, ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. தோனி, கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறார். சென்னை அணி பற்றி அவர் அதிகம் கவலைக்கொண்டிருக்கிறார். சிஎஸ்கே அணியில் 2008-ம் ஆண்டில் இருந்து அவர் இருக்கிறார். அவருடன் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த முறை தோனிக்காக நாங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும். தோனி ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்யப்படுகிறார். அவர்களுக்கு தனது சிறப்பான அதிரடியால் அவர் பதிலளித்து வருகிறார். தோனியை அடுத்து இந்த தொடரில் வாட்சனும் ராயுடுவும் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் அணி பல மேட்ச் வின்னர்களை கொண்டிருக்கிறது. 2011-ல் இருந்து நாங்கள் கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை கண்டிப்பாக வெல்வோம்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com