‘இந்த ஆட்டத்துலயும் நானே கில்லாடி’ சஹாலை திணறவிட்ட கோலி
விளம்பர படத்திற்காக விராட் கோலி ஆடும்போது, அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் சஹால் திணறும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
இதனால் இந்த முறை கோப்பை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி உள்ளது. அணி மட்டுமல்ல அதன் கேப்டன் விராட் கோலியும், அவரின் ரசிகர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் தாக்கம் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டது. அத்துடன் கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகளும் ட்ரெண்டடித்து வருகின்றன. ஐபிஎல் போட்டிக்காக விராட் கோலி சமீபத்தில் வெட்டிய ஹேர் ஸ்டைல் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது விளம்பரம் ஒன்றிற்காக பெங்களூரு அணியின் கோலி, பிரண்டன் மெக்கலம், சஹால் ஆகியோர் இந்திப் பட பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடினர். அதில், விராட் கோலிக்கு ஈடுகொடுக்க முடியாமல் சஹால் திணறும் காட்சிகள் தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது.