விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய தோனி

விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய தோனி

விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய தோனி
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் மே தினத்தை கொண்டாடினார். 

ஐபிஎல் தொடரின் இந்த சீசன் தோனிக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. தோனி தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். களத்தில் பேட்டிங் மற்றும் கேப்டன் ஷிப்பில் கலக்கும் தோனி, தனது மகளுடன் இடையே கொஞ்சி விளையாடுகிறார். தோனி மகள் ஜிவாவின் வீடியோவுக்கும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்நிலையில், விளையாட்டு மைதான தொழிலாளர்களுடன் மே தினத்தை கொண்டாடிய தோனியை அவரது ரசிகர்கள் அன்பு மழையால் பாராட்டி வருகின்றனர். சேப்பாக்கம் மற்றும் புனே மைதனாங்களின் தொழிலாளர்களுடன் தோனி மே தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அந்தப் பக்கத்தில், தோனியின் ரசிகர்கள், ‘ரியல் ஹீரோ’,‘சூப்பர் மனிதர்’ என பாராட்டுக்களை எழுதிக் குவித்தனர். 

இந்த ஐபிஎல் தொடரில் தோனி இதுவரை 3 அரைசதங்களை அடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு தோனியின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com