ஐபிஎல் 10: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது புனே

ஐபிஎல் 10: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது புனே
ஐபிஎல் 10: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது புனே

மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

ஐபிஎல் சீசன் 10-ன் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்டசமாக மனோஜ் திவாரி 58 (48) ரன்களும், ரஹானே 56 (43) ரன்களும், தோனி 40 (26) ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் - பார்த்திவ் படேல் முதலில் அதிரடி காட்டினர். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரின் போது தாகூர் வீசிய ஓவரில் அவரிடமே ரன் அவுட்டாகி வெளியேறினார் சிம்மன்ஸ் 5 (13).

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மா 1 (2), ராயுடு 0 (3), பொல்லார்டு 7 (10) ஆகிய மூன்று முக்கிய வீரர்களை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வீழத்த அணியின் போக்கே மாறியது. அடுத்த வந்த ஹர்திக் பாண்டயா 14 (10) ரன்களும், குரூனல் பாண்டயா 15 (11) ரன்களும் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்திய பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்களை சேர்த்திருந்த போது தாகூர் பந்தில் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மும்பை அணியின் தோல்வி உறுதியானது.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ரோஹித் சர்மா தலைமையில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய மும்பை அணி தகுதிச்சுற்றில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாளை கொல்கத்தா - ஐதராபாத் இடையே எலிமினேட்டர் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 19 ஆம் தேதி மும்பையுடன் தகுதிச்சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 21 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் புனேவை சந்திக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com