ஐபிஎல் 15-வது சீசன்: மார்ச் முதல் மே வரை நடைபெறும் - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

ஐபிஎல் 15-வது சீசன்: மார்ச் முதல் மே வரை நடைபெறும் - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
ஐபிஎல் 15-வது சீசன்: மார்ச் முதல் மே வரை நடைபெறும் - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

ஐபிஎல் 15-வது சீசன் போட்டிகள் மார்ச் முதல் மே வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்த காரணத்தால் ஐபிஎல் 13-வது தொடர் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது. அதேபோல் 14-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்ததால் பாதியில் நிறுத்தப்பட்டு எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் தொடர் எங்கு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஐபிஎல் 15-வது சீசன் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என்பதை உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com