“அந்த பயம் இருக்கனும்” - அஸ்வின் பந்துவீச்சும்.. வார்னர் எச்சரிக்கையும்

“அந்த பயம் இருக்கனும்” - அஸ்வின் பந்துவீச்சும்.. வார்னர் எச்சரிக்கையும்
“அந்த பயம் இருக்கனும்” - அஸ்வின் பந்துவீச்சும்.. வார்னர் எச்சரிக்கையும்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 18 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்துள்ளது. தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், வார்னர், விஜய் சங்கர் ஜோடி நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இருப்பினும், விஜய் சங்கர் 27 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். முகமது நபி 12 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

இந்தப் போட்டியில், 7வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் அஸ்வின் பந்துவீசும் போது, அவரது கையில் இருந்து பந்து முற்றிலும் வெளியேறும் வரை, மிகவும் எச்சரிக்கையாக பேட்டை க்ரீஸில் வைத்திருந்தார் வார்னர். ஒருவகையில் அஸ்வினை வார்னர் கிண்டல் செய்யும் வகையில் இது உள்ளது. இதனை காட்டும் புகைப்படம் உடனடியாக ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டது. அந்த படத்தை பார்க்கும் போது சற்றே நகைச்சுவையாக இருக்கும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது போல், இந்தப் போட்டியிலும் எதிர்பார்க்கலாம் என்று ஒரு கமெண்ட் செய்திருந்தார். 

முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பட்லரை 'மன்கட்' முறையில் அஸ்வின் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த மன்கட் அவுட் சமூக வலைதளங்களில் அப்போது பெரிய விவாதத்தையே இது கிளப்பியது.

விதிப்படி சரியாக இருந்தாலும் இந்த முறையில் அவுட் செய்வது சரியாகாது என்றும், விதியே சரி எனும் போது அதில் தவறேதும் இல்லை என்றும் இரு தரப்பு நியாயங்கள் பதிவு செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com