ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.
ஹைதராபாத் அணியைப் பொருத்தவரையில், மே மாதம் நடைபெற்ற போட்டியின் போது, திடீரென கேப்டன் பதவி பறிக்கப்பட்ட வார்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது பலமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முன்னணி வீரர் பேர்ஸ்டோவ் விலகியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக முதல்பாதி ஆட்டத்தில் விளையாடாத டெல்லி வீரர் ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 2-வது இடத்திலும் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 19 முறை மோதியுள்ள நிலையில், ஹைதரபாத் அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது.