"வீண் செலவு"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை ?

"வீண் செலவு"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை ?
"வீண் செலவு"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை ?

2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில், தொடக்க விழா வேண்டாம் என பிசிசிஐ முடிவு மேற்கொண்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போதும் மிக பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெறும். அந்த தொடக்க விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்பர். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், வேடிக்கைகள் என களைகட்டும். ஆனால் அடுத்தாண்டு முதல் தொடக்க விழா நிகழ்ச்சி இருக்காது என பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது "தொட்ட விழாக்களால் பணம்தான் செலவாகிறது. இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலும், ரசிகர்களுக்கும் எவ்வித ஆர்வமும் இல்லை. அதேநேரத்தில் தொடக்க விழாக்களில் பங்கேற்பவர்கள் நிறைய பணம் கேட்கிறார்கள்" என தெரிவித்தார்.

கடந்த காலங்களில்  ஐபிஎல் தொடக்க விழாவுக்கு மட்டும் ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடக்க விழா நடைபெறவில்லை. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com