“ஒலிம்பிக் போட்டிக்கு முன்பே அதைச் செய்வேன்” - நம்பிக்கையுடன் கூறிய நீரஜ் சோப்ரா

“பாரிசில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாகவே, 90 மீட்டரையும் தாண்டி வீச வேண்டும்” என இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ராட்விட்டர்

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியாவும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது. அதற்கான தகுதிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கத்தைத் தட்டி, இந்தியாவைத் தலைநிமிரச் செய்தவர் நீரஜ் சோப்ரா. இந்திய தடகளத்தின் முகமாக அறியப்படும் நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 88.77 தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இதையடுத்து, இந்தியாவுக்கு மீண்டும் தங்கப் பதக்கத்தைத் தட்டிப் பறிக்கும் பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபட்டு வரும் அவர், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக 90 மீட்டர் தூரத்தைத் தாண்ட வேண்டும் என இலக்கு வைத்து ஈட்டிகளை எறிந்துவருகிறார்.

இதையும் படிக்க: வணிகத்தில் மோசடி: பாண்டியா சகோதரர்கள் கொடுத்த புகாரில் மற்றொரு சகோதரர் வைபவ் பாண்டியா அதிரடி கைது!

நீரஜ் சோப்ரா
‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா இதுவரை வென்ற பட்டங்கள், பதக்கங்கள் என்னென்ன?

இதுகுறித்து தற்போது பேசியிருக்கும் அவர், “பாரிஸ் ஒலிம்பிக்கில் 90 மீ தூரத்தைக் கடக்க முயற்சி செய்வேன். பாரிஸுக்கு முன்பு அது நடக்கும் என்று நம்புகிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அதேநேரம் இந்த சாதனைக்காக பாரிஸ் ஒலிம்பிக் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதற்கு முன்பே அது நடைபெறலாம்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு, தன்னம்பிக்கை நிறைய வந்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராக இருக்கிறேன்.

என்னுடன் போட்டியிட்ட பெரும்பாலான போட்டியாளர்கள் நான் 90 மீ. தூரம் வீசிவதைப் பெருமையாகக் கூறினர். அது பெரிய விஷயமல்ல. போட்டி நாளில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியம். நான் டாஹ்லினுடன் ஈட்டி வீசுவதையே சவாலாகக் கொண்டிருக்கிறேன். அவருடன் விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் 89.94 மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா. அதில், 90 மீ என்ற மைல்கல்லை எட்ட வெறும் 6 செமீ மட்டுமே குறைவாக இருந்தது. இதுதான் அவரது சிறந்த த்ரோ ஆகும். மேலும், இதன்மூலம் அவரது தேசிய சாதனையாக இருந்த 89.30 மீ என்ற தூரமும் தகர்க்கப்பட்டது.

இதையும் படிக்க: ”மெட்ரோவிடம் பெற்ற ரூ.3,300 கோடியை திருப்பிக் கொடுங்கள்”-அனில் அம்பானிக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்

நீரஜ் சோப்ரா
பழைய ரெக்கார்டை ஓரங்கட்டி புதிய சாதனை படைத்த 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com