\
ஆணும் பெண்ணும் சமமல்ல: விராட் விளக்கம்!

ஆணும் பெண்ணும் சமமல்ல: விராட் விளக்கம்!

ஆணும் பெண்ணும் சமமல்ல: விராட் விளக்கம்!
Published on: 

ஆணும், பெண்ணும் சமமல்ல, ஒருவரை விட ஒரு தாழ்ந்தவர் என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு, தலைவர்களும் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, மகளிர் தினம் தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள விராட் கோலி, “ஆண்களும், பெண்களும் சமமல்ல, என்பதைக் கூற விரும்புகிறேன். உண்மை என்னவென்றால், ஒருவரை விட ஒருவர் தாழ்ந்தவர். பாலியல் வன்கொடுமை, பாகுபாடு, பாலியல் தொல்லைகள், அலுவலக தொந்தரவு மற்றும் அடக்குமுறை, வன்முறைகள் உள்ளிட்ட பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் இடையே, பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைந்து தங்கள் வாழ்க்கையை கடக்கின்றனர். இப்போதும் நீங்கள் சொல்லுங்கள்? ஆணும், பெண்ணும் சமம் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அவர்களில் ஒருவரை விட ஒருவர் சிறந்தவர். உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com