விளையாட்டு
கனவு நனவாகியது: தடகள வீரர் லட்சுமணன் பெருமிதம்
கனவு நனவாகியது: தடகள வீரர் லட்சுமணன் பெருமிதம்
ஜாம்பவான் வீரர் மோ ஃபராவுடன் இணைந்து ஓடியது தமது வாழ்நாளில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவம் என இந்திய தடகள வீரர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தடகளப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த போதிலும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தமது சிறு வயது கனவு நனவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வெறும் 5 நொடிகளில் பகதூர் பிரசாத் நிகழ்த்தியுள்ள தேசிய சாதனையை முறியடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் லட்சுமணன் வருந்தினார். லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் அவர் கலந்து கொண்டார். தகுதிச் சுற்றில், 13 நிமிடம் 35.69 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டி, தமது முந்தைய சாதனையை லட்சுமணன் முறியடித்தார்.