தோள்பட்டை காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்

தோள்பட்டை காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்

தோள்பட்டை காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்
Published on

தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர், நாதன் கவுல்டர்-நிலே காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக ஸ்டெயின் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணிக்காக 2 ஆட்டங்களில் ஆடி வெற்றிக்கு துணைநின்ற ஸ்டெயின் தோள்பட்டை காயத்தில் அவதிப்படுகிறார். இதனால் அவர் தென்னாப்பிரிக்கா திரும்புவதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அங்கு அவர் காயத்துக்கு சிகிச்சை பெற இருக்கிறார்.

பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்டெயின் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், உலகக் கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ள ஸ்டெயின், உலக கோப்பை போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com