ரோகித், ராயுடு அதிரடி சதம் - இந்தியா 377 ரன் குவிப்பு

ரோகித், ராயுடு அதிரடி சதம் - இந்தியா 377 ரன் குவிப்பு
ரோகித், ராயுடு அதிரடி சதம் - இந்தியா 377 ரன் குவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடுவின் அதிரடி சதத்தால் இந்தியா 377 ரன் குவித்துள்ளது. 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய தவான் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த மூன்று போட்டிகளில் சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் 16 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது.

60 பந்துகளில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 98 பந்துகளில் சதம் விளாசினார். அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு 51 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சிக்ஸரும் பவுண்டரியுமாக ரோகித்தும், ராயுடுவும் விளாசினர். 131 பந்தில் 150 ரன் குவித்தார். 200 ரன் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 162 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்தார். 7வது முறையாக ரோகித் சர்மா 150 ரன்களை எட்டியுள்ளார். இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரோகித். 

ராயுடு அதிரடியாக விளையாடி 80 பந்தில் சதம் விளாசினார். இது அவருக்கு மூன்றாவது சதம். சதம் அடித்த கையோடு அவர் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அவரை தொடர்ந்து 15 பந்தில் 23 ரன் எடுத்து தோனியும் ஆட்டமிழந்தார். 

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்தது. கேதர் 16(7), ஜடேஜா 7(4) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோச் 2 விக்கெட் சாய்த்தார். பலம் வாய்ந்த பேட்டிங் கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 378 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com