3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு
Published on

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி திட்டமிட்டுள்ளது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், ரசிகர்களால் அரங்கமே நிறைந்துள்ளது.

இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் பும்ரா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில், ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், மணிஷ் பாண்டே, குருனல் பாண்ட்யா, புவனேஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது, சஹால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப், ஹெட்மயர், டி.எம்.ப்ராவோ, ராம்டின், நிகோலஸ் பூரான், பொலார்ட், பிராத்வொயிட் (கேப்டன்), ஆலென், பியெர்ரே, தாமஸ் ஆகியோர் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com