தீபாவளி சரவெடியாக ரோகித் சதம் : இந்தியா 195 ரன்கள் குவிப்பு

தீபாவளி சரவெடியாக ரோகித் சதம் : இந்தியா 195 ரன்கள் குவிப்பு

தீபாவளி சரவெடியாக ரோகித் சதம் : இந்தியா 195 ரன்கள் குவிப்பு
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 195 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில், ஃபபியன் அலென் வீசிய பந்தில் ஷிகர் தவான் கேட்ச் அவுட் ஆனார். இதையடுத்து வந்த ரிஷப் பண்ட் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார்.

இதையடுத்து வந்த ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மா சிக்சர் மழை பொழிந்தார். தொடர்ந்து சரவெடி வெடித்த இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். ராகுல் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 196 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து, விளையாடி வருகிறது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com