‘அட இந்திய அணி இப்படி ஒரு சாதனையா?’ - சுவாரஸ்ய தகவல்

‘அட இந்திய அணி இப்படி ஒரு சாதனையா?’ - சுவாரஸ்ய தகவல்

‘அட இந்திய அணி இப்படி ஒரு சாதனையா?’ - சுவாரஸ்ய தகவல்
Published on

ஆசியக் கோப்பையின் வெற்றியை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்த சீரியஸில் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம் வீரர் பிருத்வி ஷா 134 (154) ரன்கள் குவித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இது அவருக்கு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷா இடம்பிடித்துவிட்டார்.

முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் :

பாகிஸ்தான் வீரர் காலித் இப்துல்லா 166 ரன்கள் / ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

பாகிஸ்தான் வீரர் ஜவஹர் மியான்தத் 163 ரன்கள் / நியூஸிலாந்துக்கு எதிராக

ஆஸ்திரேலிய வீரர் வைனே பி. பிலிப்ஸ் 159 ரன்கள் / பாகிஸ்தானிற்கு எதிராக

இங்கிலாந்து வீரர் டபுள்யூ.ஜி க்ரேஸ் 152 ரன்கள் / ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கான்ரேட் ஹண்டே 142 ரன்கள் / பாகிஸ்தானிற்கு எதிராக

இந்திய வீரர் பிருத்வி ஷா 134 ரன்கள் / வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக

பிருத்வி ஷா மட்டுமின்றி, புஜாரா 86 (130) ரன்கள் எடுத்தார். 72 (137) ரன்களுடன் விராட் கோலி களத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 364 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்துள்ளது.

364 ரன்கள் என்பது, இதுவரை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், ஒரே நாளில் இந்திய அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெஸ்ட் போட்டியின் ஒரே நாளில் இந்திய அணியின் ரன் குவிப்பு சாதனைகள் :

364/4 ராஜ்கோட்டில் / 2018 (முதல் நாள்)

361/4 க்ராஸ் இஸ்லெட், மேற்கிந்திய தீவு / 2006 (முதல் நாள்)

346/5 கொல்கத்தா / 2011 (முதல் நாள்)

338/8 மும்பை / 2013 (இரண்டாவது நாள்) 

317/6 கொல்கத்தா / 2013 (இரண்டாவது நாள்) 

316/5 நாக்பூர் / 1994 (இரண்டாவது நாள்)
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com