விளையாட்டு
இந்தியா-தெ.ஆ 3வது டெஸ்ட் 1வது நாள்: போட்டோ கேலரி!
இந்தியா-தெ.ஆ 3வது டெஸ்ட் 1வது நாள்: போட்டோ கேலரி!
3வது டெஸ்டின் முதல் நாள் இறுதியில் தென்னாப்ரிக்கா 6 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள நியூ வாண்டெரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணியில் கேப்டன் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும், புவனேஸ்குமார் 30 ரன்களும் எடுத்தனர். தென்னாப்ரிக்க அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், மோர்னே மார்கல், பிலண்டர் மற்றும் அண்ட்லி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கி தென்னாப்ரிக்கா முதல் நாள் ஆட்ட இறுதியில் 6 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

