தென்னாப்பிரிக்காவை கிழித்துவிட்டது இந்தியா: கத்தியுடன் புகழ்ந்த சேவாக்!

தென்னாப்பிரிக்காவை கிழித்துவிட்டது இந்தியா: கத்தியுடன் புகழ்ந்த சேவாக்!

தென்னாப்பிரிக்காவை கிழித்துவிட்டது இந்தியா: கத்தியுடன் புகழ்ந்த சேவாக்!
Published on

தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக 34 விக்கெட்டுகளை எடுத்துள்ள சஹாலை இந்திய முன்னாள் கிர்க்கெட் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் போராடித்தோற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 5
போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 4-1 என்ற கணக்கில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன்மூலம் இந்திய அணிக்கு
ஒருநாள் தொடரின் கோப்பையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று 6வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க
அணி 204 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் தகூர் 4 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் சஹால் 2 விக்கெட்டுகளையும்
கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள சேவாக், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் 33 விக்கெட்டுகளை
வீழ்த்தி, அந்த அணியை நொறுக்கியுள்ளார் சஹால் எனவும், இன்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளையும் திறமையாக தகூர்
வீழ்த்தியுள்ளார் எனவும் பாராட்டியுள்ளார். அத்துடன் சிறப்பான பந்துவீச்சால், 5-1 என்ற கணக்கில் இந்தியா அசத்தில் வெற்றி பெறும்
என்றும் கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவின் போது ரத்தக் கரையுடன் இருக்கும் கத்தி ஒன்றையும் சேவாக் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com