தாகூர் பந்துவீச்சில் சுருண்டது தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 6வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் மார்கம் மற்றும் அம்லா, இந்திய பந்துவீச்சாளர் தாகூர் பந்துக்களை எதிர்கொள்ள முடியாமல் 24 மற்றும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினர்.
அடுத்ததாக களமிறங்கிய டி வில்லியர்ஸ் 30 ரன்கள், ஷோண்டோ 54 ரன்கள் எடுத்த அவுட் ஆகினர். அவர்களின் பேட்டிங்களால் அணியின் ரன்கள் 100ஐ தாண்டியது. பின்னர் வந்தவர்களில் க்ளாசென்(22), பெலுக்வாயோ(34), மோர்னே மார்கல்(20) என்ற நிலையில் ஆட்டமிழக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 46.5 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்பிரிக்கா 204 ரன்கள் எடுத்தது. அதன்படி 205 ரன்கள் என இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் தாகூர் 4, பும்ரா 2 மற்றும் சஹால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.