முக்கிய கட்டத்தில் ரஹானே, புவனேஷ்குமார் விக்கெட்டுகளை மோர்னே மார்கல் வீழ்த்தினார்.
இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்ரிக்கா 194 ரன்களுக்கு எடுத்தன. இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்க்ஸ் பேட்டிங்கை விளையாடிய இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழந்து, 247 ரன்கள் எட்டியுள்ளது. இதன்மூலம் தென்னாப்ரிக்காவை விட கூடுதலாக 240 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.
இந்தியாவில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 25 ரன்களும், கேப்டன் கோலி 41 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா தடுமாற்றத்தை சந்தித்தது. அந்த சூழலில் நிலைத்து விளையாடிய ரஹானே மற்றும் புவனேஷ்குமார் இந்திய அணியின் ரன்களை உயர்த்தினர். ஆனால் அரை சதம் அடிக்காமல் 48 ரன்களில் ரஹானே விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் சென்ற கொஞ்ச நேரத்தில் புவனேஷ்குமாரும் 33 ரன்களில் அவுட் ஆனார். நிலைத்து விளையாடிய இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மோர்னே மார்கல் மாற்றினார். இதற்கிடையே முகமது சமி 27 ரன்கள் எடுக்க அவரது விக்கெட்டை லுங்கி ங்கிடி எடுத்தார்.