முதல் டி20 தெ.ஆ-க்கு 204 இலக்கு: அடித்து நொறுக்கிய தவான்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற 204 ரன்களை தென்னாப்பிரிக்க எட்டவேண்டும்.
இந்தியா-தென்னாப்பிரிக்க இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. நியூ வாண்டெரெர்ஸ் மைதானத்தில் நடைபெறும்
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங்
செய்த இந்திய 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் ஷர்மாவும், தவானும் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டினர். இருப்பினும் 21 ரன்களில் ரோகித்
வெளியேறினார். அடுத்த வந்த ரெய்னா 15 ரன்களில் வெளியேற, நிலைத்து விளையாடிய தவான் 39 பந்துகளில் 72 ரன்களை
விளாசினார். அடுத்தடுத்து வந்த கோலி(26), மணிஷ் பாண்டே(29), தோனி(16), பாண்டியா(13) ரன்களை எடுக்க இந்திய அணியின் ரன்கள்
200ஐ தாண்டியது. அதன்படி 204 ரன்கள் என்ற கடினமான இலக்கு தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க
அணி சார்பில் தாலா 2 மற்றும் மோரிஸ், ஷாம்சி, பெக்லுக்வாயோ உள்ளிட்டோர் 1 விக்கெட்டை கைப்பற்றினர். தற்போது தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.