தென்னாப்பிரிக்க அணியில் உட்கார வைக்கப்பட்ட லுங்கி!
தென்னாப்பிரிக்க அணியின் 11 பேரில் லுங்கிசனி கிடி தேர்வு செய்யப்படவில்லை.
இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக்(10) மற்றும் அம்லா(7) ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். 4.1 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்கா 17 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் பந்துவீச்சாளரான லுங்கிசனி கிடி இந்த ஆட்டத்தின் 11 வீரர்களின் ஒருவராக தேர்வு செய்யப்படவில்லை. அந்த அணியில் அம்லா, டி காக், டு ப்ளெஸிஸ், எய்டன் மார்க்ரம், ஜெபி டுமினி, டேவில் மில்லர், க்ரிஷ் மோரிஷ், அண்டிலி, ரபாடா, மோர்னே மார்கல், இம்ரான் தகிர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 4 முறை கோலி விக்கெட்டை லுங்கி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.