சாம்பியன்ஸ் கோப்பை தொடர்: மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்: மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்: மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாக கோப்பையை வென்றது. 

போட்டி தொடர்பாக பதிவுகள் இன்று காலை முதலே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தன. ட்விட்டரில் #IndvsPak என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. முடிவில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் அந்த சூழலை கலகலப்பாக்கி வருகின்றனர்.

பட்டிணத்தில் பூதம் படத்தில் இடம்பெற்றுள்ள பூதத்திடம் நாகேஷ், இந்தியா தோத்துக்கிட்டிருக்கே!.. அது ஜெயிக்கிறதுக்கு ஏதாவது பண்ணுங்க ஜீபூம்பா என்று கேட்பது போலவும், அதற்கு ஜீ பூம்பா பூதம் என்னால முடியாததை செய்ய சொல்லி கேட்குறியே!. வேணும்னா என்னை திரும்பவும் ஜாடிக்குள்ளேயே அடைச்சிரு என்று கூறுவது போலவும் மற்றொரு மீம் சமூகவலைதளங்களில் உலவுகிறது.

இதற்கெல்லா சிகரமாக, இன்றைய அரசியல் சூழலை பிரதிபலிக்கும் வகையில் சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் நடித்த சிறுவன், ஒருவேளை  மாட்டுக்கறி சாப்பிட்டிருந்தால் நாங்களும் ஜெயிச்சிருப்போமா என்னவோ? என்று கேட்பது போல மீம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு வாசகங்கள் தாங்கிய மீம்ஸ்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.   


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com