விளையாட்டு
சாம்பியன்ஸ் கோப்பை போட்டி: பாகிஸ்தானுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு
சாம்பியன்ஸ் கோப்பை போட்டி: பாகிஸ்தானுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 289 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் போட்டியில் மூன்று முறை மழை குறுக்கிட்டதால் பாகிஸ்தான் அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 91 ரன்களும், விராத் கோலி 81 ரன்களும், ஷிகர் தவான் 68 மற்றும் யுவராஜ் சிங் 53 ரன்களும் எடுத்தனர். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி 72 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பிய ஹர்திக் பாண்ட்யா 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.