முதல் டி20 : இந்தியா போராடித் தோல்வி

முதல் டி20 : இந்தியா போராடித் தோல்வி

முதல் டி20 : இந்தியா போராடித் தோல்வி
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடித் தோற்றது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆர்ஸி ஷார்ட் 7 (12) ரன்களில் வெளியேறினார். 

இதைத்தொடர்ந்து கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் வீசிய சுழலில் கேட்ச் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் தொடர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதிரடியாக விளையாடிய கிரிஷ் லின் 37 (20) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர் 16.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.  மேக்ஸ்வெல் 46 (23) மற்றும் மார்கஸ் 31 (18) ரன்கள் எடுத்த நிலையில் போட்டி மழையால் தடைபட்டது. பின்னர் அந்த ஓவர் மட்டும் விளையாடப்பட்டு அத்தோடு ஆஸ்திரேலியா பேட்டிங் முடித்துக்கொள்ளப்பட்டது. இதில் மேக்ஸ்வெல் 46 (24) ரன்களில் வெளியேறினார். 17 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து மழையின் காரணமாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் விளையாடாததால் இந்திய அணியின் இழக்கு இறுதி நேர ரன் ரேட் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி இந்திய அணி 17 ஓவர்களுக்கு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகிஷ் ஷர்மா 7 (8), ராகுல் 13 (12), விராட் கோலி 4 (8) ரன்களில் வெளியேற, தவான் நிலைத்து விளையாடி 42 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

20 (15) ரன்கள் எடுத்த நிலையில் பந்த் அவுட் ஆனார். இதனால் போட்டியில் பதட்டம் பற்றிக்கொண்டது. இறுதி நேரத்தில் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட்டை பறிகொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com