விளையாட்டு
எழுச்சி பெறுமா இந்திய அணி?: பெங்களூரு டெஸ்டில் பேட்டிங் தேர்வு
எழுச்சி பெறுமா இந்திய அணி?: பெங்களூரு டெஸ்டில் பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
புனே டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய்க்குப் பதிலாக மற்றொரு தமிழக வீரர் அபினவ் முகுந்தும், ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக கருண் நாயரும் சேர்க்கப்பட்டிருந்தனர். முதல் டெஸ்டில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் எதுவும் இன்றைய போட்டியில் செய்யப்படவில்லை. பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி சற்றுமுன்னர் வரை 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் அபினவ் முகுந்த் ரன் கணக்கை தொடங்காமலேயே மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.