இந்தியா-இங்கிலாந்து போட்டி : 10 சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியா-இங்கிலாந்து போட்டி : 10 சுவாரஸ்ய தகவல்கள்
இந்தியா-இங்கிலாந்து போட்டி : 10 சுவாரஸ்ய தகவல்கள்
  1. இந்திய அணியின் 11 பேர் பட்டியலில் விஜய் சங்கர் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதில் ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டிருந்தார்.
  2. 10 ஓவரில் ஹர்திக் வீசிய பந்து ஜாசன் கைகளை உறசி தோனியிடம் கேட்ச் ஆனது. ஆனால் அம்பயரும் அவுட் கொடுக்கவில்லை.தோனியும் ரிவீவ் கேட்கவில்லை.
  3. முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்தபோதிலும், 10 ஓவர்களில் 69 ரன்கள் வாரிக்கொடுத்தார்.
  4. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் கொடுத்த இந்திய வீரர் என்ற வருத்தத்திற்குரிய சாதனையை சாஹல் படைத்தார். 10 ஓவர்களில் 88 ரன்கள்.
  5. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 9 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி சொதப்பினார்.
  6. ரோகித் ஷர்மா நிதானமாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவரது ஒரு கேட்சை அதில் ரஷித் தவறவிட்டார்.
  7. இளம் வீரர் ரிஷாப் பண்ட் தனது முதல் உலகக் கோப்பை போட்டியை விளையாடினார். 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
  8. 45வது ஓவர் முதல் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியை காட்டாமல் சிங்கில்களை அடித்தனர். 5 ஓவர்களில் அவர்கள் 39 ரன்களை சேர்த்தனர்.
  9. தோனி ஏன் அடித்து ஆடவில்லை ? தோல்விக்கு அவரே காரணம் என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
  10. நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் தோல்வியை சந்தித்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com