\
இந்தோனேஷியா ஓபன் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிவி சிந்து

இந்தோனேஷியா ஓபன் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிவி சிந்து

இந்தோனேஷியா ஓபன் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிவி சிந்து
Published on

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார்.

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை 21-14, 21-7 என்ற செட்களில் பிவி சிந்து எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் சென் யுபெய்யை எதிர்கொண்டார் பிவி சிந்து. பரபரப்பாக நடைபெற்ற முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் சிந்து போராடி வென்றார். ஆனால், இரண்டாவது சுற்றை 21-10 என்ற கணக்கில் அவர் எளிதில் வீழ்த்தி பெற்றார்.

இதனையடுத்து, இறுதிப் போட்டியில் ஜப்பானின் அகனே யமகுசியை பிவி சிந்து எதிர்கொள்ளவுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com