இதுவரை யாரும் தொடாத மைல்கல்! - வரலாறு படைத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி

இதுவரை யாரும் தொடாத மைல்கல்! - வரலாறு படைத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி
இதுவரை யாரும் தொடாத மைல்கல்! - வரலாறு படைத்த  வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை இந்தியாவைச் சேர்ந்த ஜூலன் கோஸ்வாமி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை தொடரில் இன்று பே ஓவல் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இங்கிலாந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இருந்தபோதும் இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாமி பியூமண்டை ஜூலன் கோஸ்வாமி 1 ரன்னில் வெளியேற்றினார். இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். 

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஆவார். ஜூலனின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜூலன் கோஸ்வாமியை வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. என்ன ஒரு வீரர் என்று பொருள்படும் விதத்தில் “What a player!” என்று தலைப்பிட்டு ஜூலனை வாழ்த்தியுள்ளது ஐசிசி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com