உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்

உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் உலக மல்யுத்த வீராங்கனைக்கான ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு தங்கம் வென்றதன் மூலம் வினேஷ் போகாட் முதலிடம் பிடித்துள்ளார். 53 கிலோ எடைப் பிரிவில் உலக அளவில் 14 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

உலக ரேங்கிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்த வினேஷ் போகாட் தற்போது முதலிடத்திற்கு முந்தியுள்ளார். கனடாவின் டயானா மேரியை 4 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார் வினேஷ். 

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற Matteo Pellicone Ranking Series நிகழ்வில் டயானாவை வினேஷ் வீழ்த்தியதன் மூலம் தங்கம் வென்றார். கடந்த வாரம் ஒரு தங்க பதக்கத்தை அவர் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com