ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்: இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன்!

7-வது ஆசிய ஹாக்கி தொடர் போட்டியில், இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ளது.
Indian hockey team
Indian hockey teamtwitter

7வது ஆசிய ஹாக்கி தொடர் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்ற லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் மலேசியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இதில், ஜப்பான் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதுபோல் மலேசிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. இப்போட்டியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இதன்மூலம் ஆசிய ஹாக்கி தொடரில் 4 முறை சாம்பியன் பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com