விளையாட்டு
உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி படைத்த சாதனை
உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி படைத்த சாதனை
ஐசிசியின் ஒரே தொடரில் சர்வதேச தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள அணிகளை வீழ்த்திய ஒரே அணி என்ற பெருமையை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் நடந்துவரும் மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதியில் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலிய அணியை, இந்திய மகளிர் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேபோல, தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை, தனது முதல் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மிதாலி தலைமையிலான இந்திய அணி. சர்வதேச தரநிலையில் 3ஆவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மகளிர் அணியை, 186 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி வீழ்த்தியது. இதன்படி சர்வதேச தரவரிசையில் இந்திய மகளிர் அணி 4ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.