மகளிர் உலகக் கோப்பை தொடர்: இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் விளாசினார்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சதம் பதிவு செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் முதல் சுற்றுப் போட்டியில் இந்த சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். முக்கியமான போட்டிகளில் திறம்பட செயல்பட்டு அணிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பவர் என்பதை இந்த சதத்தின் மூலம் நிரூபித்துள்ளார் ஸ்மிருதி.
78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய போது ஹர்மன்ப்ரீத் உடன் இணைந்து இன்னிங்ஸை ஸ்டெடி செய்தார் ஸ்மிருதி. கடந்த 2017 உலகக் கோப்பை தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இன்னிங்ஸையும் சேர்த்து கடைசியாக விளையாடிய ஐந்து இன்னிங்ஸில் இரண்டு சதம் மற்றும் ஒரு சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். இந்த இன்னிங்ஸில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் விளாசியுள்ளார் அவர்.