டோக்கியோ ஓலிம்பிக் போட்டி: இந்திய பெண்கள் ஹாக்கி அணி அறிவிப்பு
ஜப்பான் தலைநர் டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை) 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள இருக்கும் 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 8 வீராங்கனைகள் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர்கள். 8 வீராங்கனைகளுக்கு இது முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டியில் அடியெடுத்து வைப்பது இது ஆவது முறையாகும். ஏற்கெனவே இந்திய அணி 1980, 2016 ஆ ம் ஆண்டுகளில் தகுதிப் பெற்று இருந்தது. இந்திய அணி வீராங்கனைகள் தற்போது பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
அணி விவரம்: சவிதா, தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா, நிஷா, நேஹா, சுஷிலா சானு, மோனிகா, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி, ராணி ராம்பால், நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி.