\
ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த முதல் வீராங்கனையானார் மித்தாலி ராஜ்!

ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த முதல் வீராங்கனையானார் மித்தாலி ராஜ்!

ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த முதல் வீராங்கனையானார் மித்தாலி ராஜ்!
Published on: 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார் அவர்.

38 வயதான மித்தாலி தனது 213 வது ஒருநாள் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இன்றைய போட்டியில் 71 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தார் அவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையையும் மித்தாலி படைத்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com