பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் அர்பணிப்பை புகழ்ந்த இந்திய வீராங்கனை!
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகள் நேற்று விளையாடின. பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இந்த போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர் இந்திய வீராங்கனைகள்.
அந்த படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர் வீராங்கனைகள். அதில் பிஸ்மா தனது கையில் குழந்தையை ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிஸ்மாவின் அர்ப்பணிப்பை புகழ்ந்து இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
“சர்வதேச அளவில் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் மகளிருக்கு சிறந்தவொரு இன்ஸ்பிரேஷன் தருகிறார் பிஸ்மா மரூஃப். குழந்தையை ஈன்றெடுத்த ஆறு மாத காலத்தில் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்பி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். அம்மாவை போலவே பிஸ்மாவின் மகள் ஃபாத்திமாவும் பேட் உடன் களம் காண்வார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.
முன்னதாக இந்த படம் சமூக வலைதளத்தில் பரவலான பயனர்களின் கவனத்தை ஈரத்திருந்தது குறிப்பிடத்தக்கது.