உலக மல்யுத்த பொழுதுபோக்கு போட்டிக்கு இந்திய பெண் ஒப்பந்தம்!
ஹரியானாவை சேர்ந்த கவிதா தேவி என்ற பெண் உலக மல்யுத்த பொழுதுபோக்கு போட்டிக்கு WWE நிறுவனத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் கவிதா தேவி, WWE நிறுவனத்தினால் உலக மல்யுத்த பொழுது போக்கு போட்டிற்கு ஒப்பந்தம் ஆகியுள்ள முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹரியானாவை சேர்ந்த கவிதா சில மாதங்களுக்கு முன்பு நடந்த மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற பிபி புல் புல் பெண் வீராங்கனையை, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து சென்று அவருடன் சண்டையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது கவிதா மஞ்சள் நிறத்தில் உடை அணிந்திருந்ததால் பலர் அவரை ’மஞ்சள் சுடிதார் வீராங்கனை’ என்ற பெயரிலே பிரபலப்படுத்தினார்கள். அதன் பின்பு மே யங் கிளாசிக் என்ற பெயரில் நடந்த பெண்கள் போட்டியில் பங்குபெற்ற கவிதா தோல்லியை தழுவினாலும் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் கவிதா தற்போது உலக பொழுதுப்போக்கு மல்யுத்த போட்டிற்கு WWE நிறுவனத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டிகளுக்காக சிறப்பு பயிற்சிகள் கவிதாவிற்கு வழங்கப்பட உள்ளது. மேலும் இவர், WWE விளையாட்டில் புகழடைந்த மல்யுத்த வீரரான கிரேட் காளியிடம் பஞ்சாபில் பயிற்சி பெற்றவர். இவருடன், ஜோர்டானை சேர்ந்த ஷாதியா பெய்ஸோ என்ற பெண்ணும் இந்த போட்டிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மல்யுத்தத்தில் களமிறங்கப் போவதும் இதுவே முதல் முறையாகும். ரசிகர்களின் மத்தியில் பெரும் ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டி டிசம்பரில் நடைபெற உள்ளது.