அன்று தோனி.. இன்று தினேஷ் பானா.. உலகக்கோப்பையில் சிக்ஸர் விளாசி வெற்றி - வைரலாகும் போட்டோ

அன்று தோனி.. இன்று தினேஷ் பானா.. உலகக்கோப்பையில் சிக்ஸர் விளாசி வெற்றி - வைரலாகும் போட்டோ
அன்று தோனி.. இன்று தினேஷ் பானா.. உலகக்கோப்பையில் சிக்ஸர் விளாசி வெற்றி - வைரலாகும் போட்டோ

இளையோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தினேஷ் பானா அடித்த கடைசி சிக்ஸர் ஆனது, 2011ம் ஆண்டு தோனி அடித்த சிக்ஸரை நினைவுபடுத்தியது.

மேற்கிந்திய தீவுகளின் ஆண்டிகுவாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் டாம் பிரெஸ்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் 61 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி பின்னர் 91 ரன்களில் 7வது விக்கெட்டையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ரேவ் மட்டும் நிலைத்து விளையாடி 95 ரன்களை அடித்து அந்த அணியின் ரன்களை 189 ஆக உயர வழிவகுத்தார். 44.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெவிலியன் திரும்பியது. இந்திய அணியின் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அங்கிருஷ் ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமலே பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஷேக் ரஷீத் நிதானமாக விளையாடி 84 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசிய கேப்டர் யஷ் துல், இந்தப் போட்டியில் 17 ரன்களிலேயே ஆட்டமிழக்க இந்தியாவின் ஆட்டம் சற்றே தடுமாற்றம் கண்டது. அப்போது ஜோடி சேர்ந்த நிஷாந்த் சிந்துவும், ராஜ் பாவாவும் பொறுப்பாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்தனர். ராஜ் பாவா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் களம்கண்ட விக்கெட் கீப்பர் தினேஷ் பானா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மிளிர்ந்த ராஜ் பாவா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, 48வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பி வெற்றியை வசமாக்கினார் தினேஷ் பானா. இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் சமன் ஆனது. இன்னும் 15 பந்துகளில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில், சிங்கிள் தட்டிவிட்டு ஓடாத தினேஷ், லெக் திசையில் அசத்தலான சிக்ஸரை பறக்கவிட்டு, இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்தார். அவரின் கடைசி சிக்ஸர் ஆனது, ரசிகர்கள் அனைவருக்கும் 2011ம் ஆண்டு கேப்டன் எம்.எஸ்.தோனி அடித்த சிக்ஸரை நினைவுப்படுத்தியது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தோனியை போன்றே நேற்று சிக்ஸர் அடித்த இளம் வீரர் தினேஷ் பானாவும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகும். அவர் அடித்த ஷாட்டும் தோனி அடித்த அதே திசையில் அடிக்க முயற்சித்தது தான். எனவே தோனியை போன்றே எதிர்காலத்தில் உருவெடுப்பார் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க: 2000 முதல் 2022 வரை.. ஜூனியர் உலகக்கோப்பையில் வரலாறு படைக்கும் இந்திய அணி - ஓர் தொகுப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com