விளையாட்டு
‘நான் கிரீசுக்கு வந்துடேன்னு சொல்லு’ - வந்த வேகத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட சூர்யகுமார்!
‘நான் கிரீசுக்கு வந்துடேன்னு சொல்லு’ - வந்த வேகத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட சூர்யகுமார்!
இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் நம்பிக்கையாக உருவாகி கொண்டிருப்பவர் சூரியகுமார் யாதவ். சர்வதேச டி20 போட்டியில் சூரியகுமார் விளையாடும் மூன்றாவது போட்டியில் இரண்டாவது முறையாக தற்போது விளையாடி வருகிறார். இந்த ஆட்டதில் களம் இறங்கி அவர் சந்தித்த 2 வது மற்றும் 3 வது பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார் அவர்.
ரஷீத் வீசிய 10 வது ஓவரின் 4 மற்றும் 5 வது பந்தை சிக்ஸருக்கு பறக்க வித்திருந்தார் அவர். அந்த காட்சி ‘நான் கிரீசுக்கு வந்துடேன்னு சொல்லு’ எனபது போல இருந்தது. கடந்த போட்டியில் அவர் அரை சதம் கடந்திருந்தார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் காட்டும் வேரியேஷன்களை சிறப்பாக கையாண்டு வருகிறார் சூரியகுமார். 17 பந்துகளில் 32 ரன்களை குவித்து அவுட்டானார். அதில் 2 சிக்ஸரும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.