விளையாட்டு
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி: இந்திய அணி அறிவிப்பு
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி: இந்திய அணி அறிவிப்பு
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட அணியில், மத்தியக் கள வீரரான மன்பிரீத் சிங் கேப்டனாகவும், எஸ்.வி. சுனில் துணைக் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். சர்தார் சிங், உத்தப்பா ஆகிய அனுபவ வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி டாக்காவில் அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் லீக் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் ஏ பிரிவில் உள்ளன.

