இறுதிப் போட்டியில் இந்திய அணி
இறுதிப் போட்டியில் இந்திய அணிFacebook

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
Published on

ஜப்பான் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் தமிழக வீரர் கார்த்திக் செல்வம், ஆகாஷ்தீப் சிங், மன்ப்ரீத்சிங், சுமித் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.

நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா - மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com