\
இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி!
Published on: 

இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகளும் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் அன்று காய்ச்சல் அறிகுறி தென்பட்ட காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதை அடுத்து அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. 

“எதிர்பாராத விதமாக எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நான் இப்போது ஓகே. இருப்பினும் எனது மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களின் ஆலோசனையின் படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த 7 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உங்கள் அன்பினாலும், கடவுளின் அருளினாலும் பூரண குணமடைந்து களத்திற்கு திரும்புவேன்” என அவர் ட்வீட் செய்துள்ளார். 

32 வயதான அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அண்மையில் விளையாடி இருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com