சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்... ரவிச்சந்திரன் அஷ்வின் அசத்தல்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்... ரவிச்சந்திரன் அஷ்வின் அசத்தல்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்... ரவிச்சந்திரன் அஷ்வின் அசத்தல்!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் கும்ப்ளே, கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் சிங்குக்கு அடுத்தபடியாக 400 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய நான்காவது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல் கல்லை அவர் எட்டியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

அதோடு முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைந்த டெஸ்ட் போட்டிகளில் (77 போட்டிகள்) மட்டுமே விளையாடி 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையும் அஷ்வின் படித்துள்ளார். ஹாட்லி, ஸ்டெய்ன் (80 போட்டிகளிலும்), ஹெராத் (84 போட்டிகளிலும்), கும்ப்ளே (85 போட்டிகளிலும்) 400வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துளள்னர். 

இந்தியாவுக்காக கும்ப்ளே (619 விக்கெட்டுகளும்), கபில் தேவ் (434 விக்கெட்டுகளும்), ஹர்பஜன் (417 விக்கெட்டுகளும்) வீழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக அஷ்வின் இணைந்துள்ளார். 

அஷ்வினை முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கரும் தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மைல்ஸ் டூ கோ அஷ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com