“சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விளையாடுவது ஒரு கலை”-ஆடுகள விமர்சனத்துக்கு அஷ்வின் பதிலடி

“சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விளையாடுவது ஒரு கலை”-ஆடுகள விமர்சனத்துக்கு அஷ்வின் பதிலடி
“சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விளையாடுவது ஒரு கலை”-ஆடுகள விமர்சனத்துக்கு அஷ்வின் பதிலடி

இங்கிலாந்துக்கு எதிரான சென்னை - சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது இந்தியா 351 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் கோலியும், அஷ்வினும் விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. 

இதையடுத்து ஆடுகளத்தை விமர்சித்திருந்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். அது சமூக வலைத்தளத்திலும் பேசு பொருளாகி இருந்தது. பலரும் வாகனுக்கு பதிலடி கொடுத்திருந்தனர். இப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். 

View this post on Instagram

A post shared by ICC (@icc)

“இந்த ஆடுகளம் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ளதைபோல இதில் விளையாடுவது ஒன்றும் கடினம் இல்லை. இந்த ஆடுகளம் ஸ்லோவாக உள்ளது. இதில் ஒரு பேட்ஸ்மேனாக ரன் சேர்க்க வேண்டுமென்றால் பழைய முறையை பின்பற்றி ஆட வேண்டும். அதுமட்டும் தான் ரன் குவிப்பதற்கான ஒரே வழி. இதில் விளையாடுவது என்பது கலை” என அஷ்வின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com