இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா- வங்கதேச இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். இதுவரை 45 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அஸ்வின் 250 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி டெஸ்ட் அரங்கில் 48 போட்டியில் 250 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது.