ரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு கோலி விளக்கம்

ரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு கோலி விளக்கம்

ரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு கோலி விளக்கம்
Published on

கிரிக்கெட் ரசிகர் ஒருவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறியதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி தனது 30வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். அவரது பிறந்த நாள் அன்று கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், “அவர் (கோலி )மிகைப்படுத்தி காட்டப்படும் பேட்ஸ்மேன். அவரிடம் எந்தச் சிறப்பும் இல்லை. இந்த இந்தியர்களின் பேட்டிங்கை பார்ப்பதைவிட, ஆஸ்திரேலியர்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்களின் பேட்டிங்கை நான் ரசிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு உடனே பதிலளித்த கோலி, நீங்கள் இந்தியாவில் எப்படி வசிக்கின்றீர்கள் என்பது தெரியவில்லை. நீங்கள் வேறு எங்காவது சென்று வாழுங்கள். மற்ற தேசத்தை விரும்பிக்கொண்டு, நீங்கள் ஏன் எங்கள் நாட்டில் வாழ்கிறீர்கள்? உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பதை நான் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என கோபமாக பதிலளித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்த, விராட் கோலிக்கு பிசிசிஐ தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நெட்டிசன்களும் கோலியை விமர்சித்தனர்.

இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் கிண்டல் செய்வது என்னை இல்லை என நினைக்கிறேன். கிண்டல்களை ஏற்க நான் தயாராக உள்ளேன். நான் ‘இந்த இந்தியர்கள்’ என அந்த நபர் குறிப்பிட்டது குறித்து தான் விமர்சித்தேன். மத்தபடி ஒன்றுமில்லை. நாம் அனைவரும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. அதை வெளிச்சமிட்டு காட்டுங்கள். பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். அனைவரும் அன்பாகவும், நிம்மதியாகவும் இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com