ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார் இந்திய குண்டு எறிதல் வீராங்கனை
ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்ப்ரீத் கவுர், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதனால், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சமீபத்தில் நடந்த குண்டு எறிதல் போட்டியில் அவர் வென்ற தங்கப்பதக்கம் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகளுக்கான ஊக்கமருந்து சோதனை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஜூன் 1 முதல் 4ம் தேதி வரை நடந்தது. அதில், மன்ப்ரீத் கவுர் தடை செய்யப்பட்ட டைமெத்தில்பூடைலாமைன் எனும் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் மன்ப்ரீத் கவுர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக தங்களுக்கு எந்தவிதமான தகவலும் அளிக்கப்படவில்லை என்கிறார் மன்ப்ரீத் கவுரின் கணவரும், பயிற்சியாளருமான கரம்ஜீத்.