விளையாட்டு
ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்
ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்
இந்திய வீராங்கனை பூஜா கட்கர் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பைப் துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் இந்திய வீராங்கனை பூஜா கட்கர், 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார் பூஜா கட்கர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் பூஜா கட்கர்.