ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டி ம.பி. கோயிலில் இந்திய வீரர்கள் வழிபாடு!

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டி ம.பி. கோயிலில் இந்திய வீரர்கள் வழிபாடு!
ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டி ம.பி. கோயிலில் இந்திய வீரர்கள் வழிபாடு!

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக இந்திய அணி வீரர்கள் மஹாகாலேஸ்வர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மதியம், மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு அங்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணியினர், இன்று (ஜனவரி 23) காலை உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மஹாகாலேஸ்வர் கோயிலுக்குச் சென்று பஸ்ம ஆரத்தியில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மகாகால ஈஸ்வர சுவாமிக்கு பஸ்ம ஆரத்தி செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார் யாதவ், ”ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டோம். அவர் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டியது எங்களுக்கு மிக முக்கியம். நியூசிலாந்துக்கு எதிரான தொடரை நாங்கள் முன்பே வெற்றி பெற்று விட்டோம். அவர்களுக்கு எதிரான இறுதிப் போட்டியை விளையாட எதிர்பார்த்து இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 30ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டை, அந்த வழியாகச் சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி பெற்ற ரிஷப், பின்னர் டேராடூன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அதற்குப் பிறகு மேல்சிகிச்சைக்காக மும்பை அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவருக்கு முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் பகுதிகளில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு மும்பை மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com